2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

‘அம்பலம’ சிதைவடைந்துள்ளமையால் யாத்திரிகர்கள் அவதி

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சிவனொளிபாதமலைக்கான  யாத்திரைக் காலம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தின் நான்கு பிரதான வழியூடாகவே, பக்தர்கள் யாத்திரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

எனினும், இவ்வீதியில் அமைந்துள்ள “அம்பலம” என்று அழைக்கப்படும் பழையகாலத் தங்கு மடங்கள் சிதைவடைந்து, அடிப்படை வசதிகள் எதுவும் இன்றிக் காணப்படுவதாக, யாத்திரிகர்கள் முறைப்பாடு செய்து வருகின்றனர்.  

மிகவும் பழைமை வாய்ந்த இந்தத் தங்குமிடங்கள், யாத்திரிகள் சிறிதளவேனும் தங்க முடியாத நிலையில் காணப்படுவதாகவும் இதனால், இளைப்பாறுவதற்குப் பொருத்தமான இடங்கள் இன்மையால், யாத்திரிகர்கள் வீதியோரங்களிலும் மரங்களுக்குக் கீழும் என, சீரற்ற வானிலைக்கு மத்தியில் இளைப்பாறுவதற்கு இடம் தேடி அலைந்து திரிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

எனவே, இந்த மடங்களைப் புனரமைத்து, யாத்திரிகர்கள் தங்குவதற்கு ஏதுவான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .