Kogilavani / 2021 ஜனவரி 19 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
உபேந்திர பிரியங்கர
தாம் குடியிருப்பதற்கு வீடொன்று இல்லாமல் கற்பாறைக்கு அடியில், தனது மகனுடன் வசித்து வந்த பெண்ணொருவருக்கு, அயகம பிரதேச செயலகம் புதிய வீடொன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது.
குறித்த வீட்டைக் கையளிக்கும் நிகழ்வில், பிரதேச செயலாளர் நிரஞ்சன் எஸ்.ஜயக்கொடி, பிரதேச செயலக ஊழியர்கள், பிரதேசத்துக்குப் பொறுப்பான பௌத்த தேரர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்.
கணவர் கைவிட்டுச் சென்ற நிலையில், மேற்படி பெண் தனது மகனுடன் கற்பாறையொன்றுக்கு அடியில் வசித்து வந்துள்ளார்.
இது தொடர்பில், பிரதேச மக்கள் அயகம பிரதேச செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றதையடுத்து, பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஊழயர்கள், பௌத்த தேரர்களின் உதவியுடன் மேற்படி வீட்டை, பிரதேச செயலகம் நிர்மாணித்துக் கொடுத்துள்ளது.
அத்துடன் மேற்படிப் பெண்ணின் மகனை, அயகம உடுகல வித்தியாலயத்தில் இணைத்துவிடுவதற்கான நடவடிக்கைகளையும் பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது.
அயகம பிரதேச செயலகத்தின் முன்மாதிரியான செயற்பாட்டுக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago