Editorial / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ் சதீஸ்
மக்களுக்கு எங்கு, எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதைத் தீர்த்துவைப்பேனே தவிர ஓடி ஒழிய மாட்டேன் என, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நாவலப்பிட்டி பகுதியில், ஜனநாயக மக்கள் முன்னணியின் காரியாலயத்தை, திறந்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார்.
இதன்போது, தங்களுடன் நேரடியாக மோத முடியாதவர்கள் பேஸ்புக் மூலம் பிரசாரம் செய்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தான் ஒரு நாடோடி தமிழன் என்றும் தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் சமுக மேம்பாடு இந்து கலாசார
அமைச்சுப் பதவியைக் கொண்டு, நாடெங்கும் ஓடித்திரிந்து வருவதாகவும் கூறினார்.
அத்துடன், ஐக்கியம் என்று கூறிக்கொண்டு, அரசாங்கத்தின் காலடியில் சரணடைய, விருப்பமில்லை என்றும் எந்த அரசாங்கம் வந்தாலும், அந்த அரசாங்கத்திடம் கெஞ்சும் பழக்கம், ஜனநாயக மக்கள் முன்னணியிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago