Janu / 2025 நவம்பர் 18 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளவுள்ள அரச எதிர்ப்புப் பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்து கொள்ளாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அக்கரபத்தனை நகரில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற சங்கத்தின் முக்கியஸ்தர்கள் சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
“அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்த போது முதன் முதலாக நான் தான் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்து நன்றி கூறியிருந்தேன். அதேபோல், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க நாம் முடிவு செய்த நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எம்மை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் எந்த விதமான மறுப்பும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு இருக்கும் போது, சஜித் சம்பள உயர்வுக்கு எதிராக செயற்படுவதாகவும் அதை ஆட்சேபித்து வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் சிலர் கூறுவதில் எந்த விதமான உண்மையும் கிடையாது. இது போலியான ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை திசைதிருப்ப அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்படும் ஒரு சதி முயற்சியாகும். எனவே, மக்கள் போலியான பிரசாரங்களை நம்பி ஏமாந்து மோசம் போய்விடக் கூடாது.
நல்லாட்சி அரசாங்கத்தில் நான் அமைச்சராக இருந்த போது, அக்கரபத்தனை ஊட்டுவல்லி தோட்டத்தில் தலா 7 பேர்ச் காணியில் தனி வீட்டுத் திட்டத்தை அமுல்படுத்தி பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரத்தையும் பெற்றுக் கொடுத்திருந்தேன். அந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள். அதேபோல், நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தன. மலையக அபிவிருத்திக்கான அதிகார சபையும் உருவாக்கப்பட்டிருந்தது.
இன்றைய ராஜாங்கமும், ஜனாதிபதியும் மேற்கொண்டு வரும் பயனுள்ள திட்டங்களை நான் மனதார பாராட்டி நன்றி தெரிவிப்பதைப் போல, நான் செய்துள்ள நல்ல சேவைகளைப் பாராட்ட மனமில்லாமல் சில அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் வெறுமனே குறை கூறுவதும், விமர்சனம் செய்வதும் வேடிக்கையாக இருக்கிறது. நல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்டுகின்ற பண்பு இருக்க வேண்டும்.
நான் கடந்த 20 ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றேன். எத்தனையோ எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் கடந்து விட்டேன். காய்க்கின்ற மரத்துக்குத் தான் கல்லடி படும் என்பது போல, எனது சேவைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் குறை கூறுவதையே பொழுது போக்காகக் கொண்டுள்ளவர்களைப் பற்றி நான் கவலைப்படாமல் உயிருள்ளவரை மக்கள் பணியை தொடர்வேன்” என்றார்.
செ.தி.பெருமாள்

2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago