Editorial / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலாளர் தேசிய முன்னணி என்ற கட்சியே முடிவுறுத்தப்பட்டதன் பின்னர், அதில் பொதுச் செயலாளர் பதவி வகித்த என்னை நீக்கியுள்ளதாக, ஒரு செய்தியையும் இடைநிறுத்தி உள்ளதாக மற்றுமொரு செய்தியையும் 'அரச பணி' யாக ஒன்று கூடி அறிவித்திருப்பவர்களின் அறிவை மெச்சுகிறேன் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய முன்னணியின் விசேட மத்திய குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக, கடந்தவாரம் பலரும் என்னைத் தொலைபேசி மூலம் அழைத்துக் கேட்டு இருந்தனர். அதுபற்றி 'தெரியாது' என்றே அவர்களுக்கு நான் பதில் அளித்தேன். ஆனால், எனக்கே அப்படி ஓர் அழைப்புக் கடிதம் வந்த போதுதான், அதில் செயலாளர் எனக்குறிப்பிட்டு, எனது இரண்டு தொலைபேசி இலக்கங்களுமே குறிப்பிடப்பட்டு இருந்ததை அவதானித்தேன். அதனால்தான் பலரும் எனக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்து விசாரித்து இருக்கிறார்கள்.
தொழிலாளர் தேசிய முன்னணி எனும் கடிதத் தலைப்பில், பழநி திகாம்பரம் என்பவரால் கையொப்பமிடப்பட்ட திகதியிடப்படாத அந்தக் கடிதம் ஒன்று, எனது பெயருக்கு, எனது பிரத்தியேக முகவரிக்கு 'அரச பணி' ) என்பதாக 'பதிவுத்தபாலில்' அனுப்பப்பட்டிருந்தது. இப்போதுதான் என்னைப் பதவி நீக்கும், இடைநிறுத்தம் செய்யும் தீர்மானத்தை, ஓர் அரச பணியாகவும் செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
அரசியல் கட்சி சம்பந்தப்பட்ட கடிதத்தை, 'அரசபணி' பதவி முத்திரைகளையும் கடித உறைகளையும் பாவித்து அனுப்பியிருக்கும் அவரினதும் அவர்தம் ஆலோசகர்களினதும் அறிவை மெச்சுகிறேன்.
கடிதத்தின் உள்ளடக்கம், ஓர் 'அரச பணி' சார்ந்த விடயமல்ல என்பதையும் கூடவே, கடிதத்தின் உள்ளடக்கமும் கீழே குறிப்பிட்டு இருக்கும் பதவி முத்திரையும் அரச பணிக்குரியதல்ல என்பதையும் குறிப்பிட்டு, முறையற்ற அழைப்பைச் சுட்டிக்காட்டி, அந்தக் கூட்டத்துக்கு நான் சமூமகமளிக்கும் அவசியமில்லை என எழுத்து மூலம் அவர்களுக்கு அறிவித்து விட்டேன்' என்றார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago