Editorial / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
மலையகத்தில் அராஜகம் செய்வதற்காகத் தாம் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவித்துள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரம், அமைச்சினூடாக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதே தன்னுடைய இலக்கு என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், அமைதிப் பூங்காவாக வைத்திருக்க விரும்பும் மலையத்தில், மக்கள் மத்தியில் அராஜகம் செய்து குழப்பம் விளைவிக்க வேண்டும் என்றோ அத்துமீறல்களை மேற்கொண்டு அடக்கி ஆள வேண்டும் என்றோ தாம் நினைத்ததில்லை என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தான், அமைச்சுப் பதவி கிடைத்த நேரத்திலும் அது சூழ்ச்சியான முறையில் கைமாறிய நேரத்திலும், அமைதியாக இருந்து, பணிகளை முன்னெடுத்து வந்ததாகவும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு சிலருக்குத் தற்காலிக அதிர்ஷ்டம் அடித்த நேரத்தில், இரவோடு இரவாக மலையகத்தில் ஆடிய கூத்துகள் பற்றி, மக்கள் அறிந்து வைத்துள்ளனர் என்றும் இந்த நேரத்தில், மலையக மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்த சிலர் முயன்று வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் திகாம்பரம், அரசியல் ரீதியில் தம்மைத் தோற்கடிக்க முடியாதவர்கள், திரைமறைவில் இருந்துகொண்டு, தமது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில அடாவடித்தனங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய அரச நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளைச் சிதைத்தும் உடைத்தும், தம்மீது பழிபோடுவதற்கு முயன்று வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் முகமூடிகளைக் கிழித்தெரிவதற்குத் தாம் தயாராக உள்ளதாகவும், மேலும் குறிப்பிட்டுள்ளார்.
25 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
2 hours ago