2026 மே 01, வெள்ளிக்கிழமை

அருள்சாமியின் இடத்துக்கு புதல்வர் நியமனம்

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளராக, அமரர் சந்தனம் அருள்சாமியின் புதல்வரான பாரத்ஷான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் மத்திய மாகாண முன்னாள் அமைச்சருமான அமரர் எஸ்.அருள்சாமி, உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி மரணமடைந்தார்.
அவரது இடத்துக்கு வெற்றிடம் நிலவி வந்த நிலையில், பாரத்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆறுமுகன் தொண்டமான் எம்.பியின் பணிப்புரைக்கமைவாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .