2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

அறிகுறிகள் இருப்பின் விசேட சிகிச்சைப் பிரிவுக்கு வரவும்

Editorial   / 2020 மே 03 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

கொவிட்-19 வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படுபவர்களை, பலாங்கொடை அரச வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்டுள்ள விசேட கொவிட்-19 சிகிச்சைப் பிரிவுக்கு வருமாறு, வைத்தியசாலை நிர்வாகம், பலாங்கொடை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெரும்பாலும் இந்த கொவிட்-19 பற்றிய சரியான தெளிவின்மை காரணமாக, சிலர் வைத்தியசாலையின் வெளிநோயாளர்கள் பிரிவில் வரிசையில் நின்றி சிகிச்சை பெற முயல்வதாகவும் இதனால், அவர்களுக்கு கொவிட்-19 தொற்று இருந்தால், அவர்களுடன் வரிசையில் காத்திருக்கும் மற்றைய நோயாளர்களும் பாதிக்கடுவர் என, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, அவ்வாறு அறிகுறிகள் தென்படுவோர். வைத்தியசாலையின் விசேட பிரிவுக்கு வருகை தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் பின்னர், அவர்களுககு கொவிட்-19 பாதிப்பு இல்லை என்றால், அவர்கள் சாதாரண சிகிச்சையுடன் வீடு திரும்ப முடியும் என்றும் வைத்தியசாலை அறிவித்துள்ளது.

அத்துடன், அவ்வாறு அறிகுறகள் காணப்படும் பலாங்கொடை மக்கள், 070 1009090 எனும் அலைபேசி இலக்கத்துக்குத் தொடர்பை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும் வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .