Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவினை அதிகரிப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில், எதிர்வரும் மே மாதம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, நாடாளுமன்றத்தில் நேற்று (07) பிரதமரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இவ்வாறு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை என பலர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கும் 6, 000 ரூபாய் மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமினால் நாடாளுமன்றத்தில் 2016/ED/E/17 இலக்கம் கொண்ட அமைச்சரவைப் பத்திரம், 2016.05.13 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு அமைச்சரவையின் அங்கிகாரமும் நிதியமைச்சின் அங்கிகாரமும் கிடைத்தது.
இதனையே, பிரதமர் ரணில் விக்கிரமங்கவுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, துரிதப்படுத்தி, இவ்வாறு பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago