2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆசிரிய உதவியாளர்களுக்கு தொலைக்கல்வி பயிற்சியே சிறந்தது.

George   / 2017 மார்ச் 31 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-​​​எம்.செல்வராஜா

ஆசிரிய உதவியாளர்கள் தமது பயிற்சிகளைப் கலாசாலையில் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்கு, தொலைக்கல்வி நிலையங்கள் மூலம் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதே சிறந்தது என, ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தொலைக்கல்வி நிலையங்களுக்கென்று கல்வி அமைச்சு 230 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளது.

ஊவா மாகாணப் பாடசாலைகளில், 950 பேர் ஆசிரிய உதவியாளராக நியமிக்கப்பட்டனர். இவர்களில் 200 பேர் வருட இறுதியில், தங்களது ஆசிரியர் பயிற்சிகளை நிறைவு செய்துக்கொண்டு ஆசிரியர்களாக உள்வாங்கப்பட உள்ளனர்.

இதில் மீதமுள்ள 750 பேருக்கும் தொலைக்கல்வி ஆசிரிய பயிற்சி நிலையங்களின் மூலம் பயிற்சிகளை வழங்கி, ஆசிரியர்களாக உள்வாங்கப்படவுள்ளனர்.

ஆசிரியர் உதவியாளர்கள் தங்களது பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரால், அனுமதி வழங்கப்படாதவர்களாக காணப்படுகின்றனர்.

இதற்கு காரணம், ஆசிரிய உதவியாளர்களை பயிற்சிகளுக்கு அனுப்பினால், பாடசாலைகளில் ஆளணிப்பற்றாக்குறை நிலவுமென்றும், தற்போது அனுமதி வழங்க வேண்டாம் என கல்வி பணிப்பாளர்கள் மறைமுகமாக தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு சிறந்த வழி தொலைக்கல்வி ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் ஊடாக அவர்களுக்கு பயிற்சியை வழங்குவதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .