2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஆசிரிய கல்லூரிக்கான விண்ணப்பத்தில் பாடப்பிரிவு மாயம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்  

ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் தொழில்நுட்பப் பாடப் பிரிவு உள்வாங்கப்படாததால் பயிற்றப்படாத ஆசிரியர்கள் பலர் பாதிப்படைந்துள்ளதாக  இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர்.சங்கர் மணிவண்ணன் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'பெருந்தோட்ட பாடசாலைகளில் பணிப்புரிவதற்காக அண்மையில் வழங்கப்பட்ட ஆசியர் உதவியாளர் நியமனத்தின்படி அவ்வாசிரியர்கள் தமது பயிற்சி நெறியை நிறைவு செய்யும் வரையில் 'ஆசிரிய உதவியாளர்' என்ற தரத்தை  உடையவர்களாகவே இருப்பர்.

மேலும், இத்தரத்தின் அடிப்படையில் சம்பளமாக ரூபாய் 6,000 மட்டுமே வழங்கப்படும். இந்நிலையில் ஆசிரிய பயிற்சி கல்லூரிக்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் பாடத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படவில்லை.  இதனால் இப்பாடத்துறைக்காக நியமிக்கப்பட்ட கணிசமான பயிற்றப்படாத ஆசிரியர்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .