2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஆடாத ஆசிரியை நடுவரான சோகம்

Editorial   / 2024 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் பல வலயங்களில் தற்போது தமிழ்த்தின போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் சில வலயங்களில் முறைக்கேடுகள் இடம்பெற்றமை தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், கண்டி வலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (11)  நடத்தப்பட்ட தமிழ்த்தின போட்டிகளில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த போட்டிகள் தெல்தோட்டையில் இடம்பெற்றன.    

 நடுவர் குழுவில் விடயதானம் தொடர்பில் எவ்விதமான அனுபவமற்றவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். உதாரணமாக தனி நடனத்துக்கான நடுவர் குழாமில், நடனமே கற்றுக்கொள்ளதா, எவ்விதமான முன் அனுபவமும் இல்லை ஆசிரியை இணைத்துக்கொள்ள பட்டிருந்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  

நடுவராக பணியாற்றிய அந்த ஆசிரியை ஆரம்பப்பிரிவு நியமனம் உள்ள தமிழ் பாட வளவாளர் என்றும், அந்த ஆசிரியை தனி நடனத்துக்கு வழங்கிய புள்ளியை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுடுகிறது மடியை பிடி என்பது போல, மாணவர்களை போட்டிக்கு அழைத்து வந்த ஆசிரியர்களில் ஒரு சிலரை நடுவர் குழுவில் இணைத்து போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.  

போட்டிகளுக்காக மாணவர்கள் காலை 8 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளது, போட்டிகள் நண்பகல் 12 மணியை கடந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  போட்டிகள்  இரவு 10 மணியை தாண்டி நிறைவடைந்துள்ளன.

தூர பிரதேசங்களுக்கு வந்திருந்த மாணவர்களில் சிலரை அவர்களுடைய பெற்றோர்களே அழைத்து வந்துள்ளனர். இரவு வேளையில் மாணவர்களை வைத்திருந்தமையால்,  பெற்றோர்களுக்கும் வலயத்தின் பொறுப்பதிகாரி களுக்கும் இடையில் கடும் வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளன.

வாக்குவாதம்  முற்றி போகவே, நீங்கள் வந்து புள்ளிகளை போடுங்கள் என அதிகாரிகள் பெற்றோர்களிடம் கடுந்தொனியில் தெரிவித்துள்ளனர். போட்டிகள் நள்ளிரவு 12 மணியை கடந்து நிறைவடைந்துள்ளது. இதனால், வாகன வசதிகள் இல்லாத மாணவர்களும் மாணவிகளும் பெற்றோர்களும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வீடுகளுக்குச் சென்று சேர்ந்துள்ளனர். 

மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டிய இவ்வாறான நிகழ்வுகள் முறையாக ஒழுங்கமைக்க கண்டி வலயக் கல்விப் பணிமனை தவறியுள்ளதாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வலயக்கல்விப் பணிமனையுடன் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்த போதிலும் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை.

கண்டி வலயக் கல்விப் பணிமனையின் விளக்கத்தை 0117479372 அல்லது 0117479375 என்ற தொலைபேசி இலக்கத்துடன் சனி,ஞாயிறு தினங்களை தவிர்த்து ஏனைய தினங்களில் மாலை 6 மணிக்கு முன்னர் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும். இல்லையேல்,  http://tamilmirrorofficial@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X