R.Maheshwary / 2022 ஜனவரி 24 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆட்லி பிரிவிலுள்ள லயக்குடியிருப்பு ஒன்ற இன்று(24) காலை தீப்பரவலுக்கு உள்ளானது.
காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீடு முற்றாக எரிந்துள்ளது. இதனால் இந்த வீட்டில் இருந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள் உள்ளிட்டப் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
இதேவேளை இது தொடர்பாக டயகம பொலிஸ் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்துக்கு விரைந்த பொலிஸார், தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருவதோடு, தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது.



3 hours ago
8 hours ago
9 hours ago
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago
01 Apr 2026