2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’ஆணையாளரும், பொலிஸாரும் கண்டுகொள்வதில்லை’

Nirosh   / 2021 ஜூன் 24 , மு.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

எல்லாப் பக்கங்களில் இருந்து மலையக மக்களுக்குப் பிரச்சினைகள் வந்தால், அந்த மக்கள் எவ்வாறு சமாளிப்பார்களென கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், பெருந்தோட்டங்களில் என்ன வகையான நிர்வாகங்கள் நடக்கின்றன? தொழில் ஆணையாளரும், பொலிஸாரும் எதனையும் கண்டுகொள்வதில்லை எனவும் குற்றஞ்சுமத்தினார்.

அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள், கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் நேற்றுக்(23) கலந்துகொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கொரோனா வைரஸ் நிலைமைகளால் மலையக மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை. இதனாலேயே தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மலையகப் பகுதிகளில் லயன்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை காரணமாக, கொரோனா வைரஸ் மலையகப் பகுதிகளில் வேகமாகப் பரவுகிறது. தொழிலாளர்களுக்கு மூன்று நாள் வேலைகளே வழங்கப்படுகின்றன. இந்த மூன்று நாள் வேலையிலும் தொழிலாளர்கள் 20 கிலோ கொழுந்து பறிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பெருந்தோட்டங்களைப் பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான வகையில் நிர்வகிக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X