Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
நல்லதண்ணி பிரதான வீதியின் மோகினி எல்ல நீர் வீழ்ச்சிக்கு அருகில், மேற்கொள்ளப்பட்ட வீதி அகலப்படுத்தும் செயற்பாட்டால், குறித்த வீதியானது மண்சரிவுக்குள்ளாகும் அபாயத்தில் இருக்கின்றது.
குறித்த வீதியானது நல்லதண்ணி நகரம் வரையில் அகலப்படுத்தி செப்பனிடப்பட்டுள்ள
நிலையில், மோகினி எல்ல நீர் வீழ்ச்சிக்கு அருகில், பாரிய அளவில் மண் திட்டுக்களை
அகற்றப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு அகலப்படுத்தப்பட்ட பகுதியில் பாரிய கற்கள் காணப்படுவதோடு, அவை
எவ்வேளையிலும் சரிந்து விழும் நிலையிலே இருப்பதாகவும் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மரங்கள் வெட்டப்பட்டு, அவை பாதையோரங்களிலே கைவிடப்பட்டு இருப்பதால், அது
வாகனங்களை செலுத்துவோருக்கு பலவகையிலும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகின்றது.
குறிப்பாக இவ்வாறு கைவிடப்பட்ட மரங்களால் சில சந்தர்ப்பங்களில் விபத்துக்கள்
ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் காணப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த குறித்த பகுதியில், வெட்டப்பட்ட மரக்குற்றிகள்
அகற்றப்படாமல் அவை உக்கி பார்ப்பதற்கு அவலட்சணமாக இருப்பதாகவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, மோகினி எல்ல பகுதியில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலையை கருத்திற் கொண்டு,
சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் கவனம் செலுத்துமாறும் பிரதேசவாசிகள் கோரிக்கை
விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .