Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
ஊரடங்குச்சட்டம் காரணமாக, ஆயுர்வேத மருந்து பாவனையாளர்கள், அவர்களுக்கான மருந்துக்களைப் பெற்றுக்கொள்வதில், பல்வேறு அசௌகரிகங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதனைக் கருத்திற்கொண்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், ஆயுர்வேத மருந்து பாவனையாளர்களுக்கு, அவரவர் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மருந்துகளை வழங்க, பிரதேச சபையின் ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைவாக பிரதேச சபைக்குரிய ஆயுர்வேத வைத்தியசாலை ஊழியர்கள், மருந்துகளைப் பொதி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த மருந்துக்களை, நாளை (03) முதல், விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.
56 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago