Editorial / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி
“ஒன்றிணைந்த எதிரணியுடன் இன்று, பாரிய சக்திகள் இணைந்துள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவை வழங்க எம்முடன் இணைந்துள்ளது” எனத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் தம்முடன் இணைந்துள்ளதால், இன்று தாம் எதிர்க்கட்சியாக, பலமிக்கவர்களாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மாவனெல்லையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், “இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்பூசல்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ள இலங்கையில், அதனைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டமொன்றும் இல்லை” என்றார்.
“இன்று இலங்கையில் தேயிலை, தென்னை, இறப்பரை விற்பனை செய்வதற்கு எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. எனினும் கோட்டாபயவின் எதிர்கால வேலைத்திட்டத்துக்குள், இதற்கான பலமிக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். மக்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தினால் மாத்திரமே, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்” என்றார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago