Editorial / 2019 மார்ச் 19 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, கினிகத்தேனை, வட்டவளை ஆகிய பிரதேசங்களுக்கு, நேற்று (18), திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, கினிகத்தேனை பொதுவைத்தியசாலை, கடவலை விக்னேஸ்வரா கல்லூரி, வட்டவளை பொதுவைத்தியசாலை, வட்டவளை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.
குறிப்பாக, வைத்தியசாலையில் நிலவும் பௌதீக, ஆளணிப் பற்றாக்குறைகளைக் கேட்டறிந்துக்கொண்டதோடு, அதை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், பாடசாலைகளுக்குச் சென்ற ஆளுநர், வகுப்பறைகளையும் பார்வையிட்டார்.
இதேவேளை, வட்டவளை தமிழ் வித்தியாலயத்துக்கு வருகை தருவதற்கான நிகழ்ச்சி நிரல் இல்லாவிடினும், மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, குறித்தப் பாடசாலைக்கும் விஜயம் செய்தார்.
இதன்போது, அந்தப் பாடசாலையின் குறைபாடுகள் அடங்கிய கடிதமொன்று, பாடசாலை அதிபரால் கையளிக்கப்பட்டது.
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago