Editorial / 2023 மே 23 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்
அக்கரப்பத்தனை, நியூபோட்மோர் தோட்டத்துக்குச் சொந்தமான இடத்தினையும் பொது மயானம் உள்ள பகுதியில் காணப்படும் காணிகளையும் தோட்ட தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து , செவ்வாய்க்கிழமை ( 23) இந்த தோட்டத்தைச்சேர்ந்த 150 தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தையும் தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.
அந்த இடத்தை தோட்ட நிர்வாகம் உடனடியாக மீளப் பெற்று தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். என தெரிவித்தே வேலை நிறுத்த போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்தோடு,அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில், தோட்ட நிர்வாக அதிகாரி மற்றும் தொழிலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவர் எஸ். சச்சிதானந்தன் தோட்ட அதிகாரியோடு கலந்துரையாடல் மேற்கொண்டார். இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் புகார் செய்வதாகவும் தோட்ட நிர்வாகத்துடன் கதைத்து காணியை பெற்று மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இவர் மக்கள் மத்தியில் குறிப்பிட்டார்
இக்காணி தொடர்பாக ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த இடத்தை நிர்வாகம் பெற்று தராவிட்டால் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக தொழிலாளர்கள் நிர்வாகத்துக்கு எச்சரித்துள்ளனர் .
பொதுமக்கள் இணைந்து கையொப்பமிட்ட மகஜர் ஒன்றினையும் நிர்வாக அதிகாரியிடம் வழங்கி வைத்தனர்.



17 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago