Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், சனிக்கிழமை (02) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்
நுவரெலியாவில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.கா வின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் பெருமாள் ராஜதுரை, இ.தொ.காவின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய குழுவினர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்கள்
குறிப்பாக இச் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.
அதாவது மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பிலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளுக்கான காணி உரித்தைபெற்றுக் கொடுப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
அதாவது மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பிலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கபடுகின்ற வீட்டுத்திட்டத்தின் விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மிக விரைவில் வீட்டுத்திட்டங்கள் நிறைவு செய்ய முயற்சிப்பதோடு, மேலதிக அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவி கீழ் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினை(வித்தியாவர்தன) வழங்கி எமது ஆசிரியர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய துறைகளில் புலமையை அதிகரித்துக் கொள்வதற்கான உதவி வழங்கியைமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டதோடு, அத்திட்டத்தை மேலும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறும் இ.தொ.கா வினால் கோரிக்கை வைக்கப்பட்டது.
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு புதிய கட்டடம் ஒன்றை இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிப்பதற்கான திட்டம் ஒன்று இருப்பதாகவும், வைத்தியர்களுக்கான விடுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
அதேபோல் இந்திய அரசின் புலமைத் திட்டத்தினூடாக மிகவும் குறைந்த அளவிலான மலையக மாணவர்கள் உள்வாங்க படுவதனால், எதிர் காலத்தில் மலையக மாணவர்களுக்கு என்று இந்திய துணைத் தூதரகத்தினூடாக இந்திய அரசின் புலைமை திட்டம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இது தொடர்பாக விரைவில் மலையகத்திற்கு என்று புதியதொரு புலைமை திட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த அதேவேளை இதனூடாக அதிகப்படியான மலையக மாணவர்கள் உள்வாங்கபடுவார்கள் என்று கருத்து பரிமாறப்பட்டது.
மேலும் மலையகத்திற்கான இந்திய அரசினால் வழங்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதை இந்தியா விரும்புவதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
புதிதாக தெரிவுசெய்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெறவுள்ள பயிற்சிப் பட்டறையில் இ.தொ.கா சார்பில் 20 உறுப்பினர்களுக்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதற்காக பதிலையும் விரைவில் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளான உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், பெருமை கொள்வதாகவும் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துக்கொண்டார்.
1 hours ago
3 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
15 Aug 2025