Freelancer / 2023 ஜூன் 08 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டங்களில் தொடர்ந்தும் இனவாத செயற்பாடு தொடர்ந்தால் பெருந்தோட்ட நிர்வாகங்கள் பாரியதொரு பிரச்சனைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பதுளை, கலன் தோட்டத்தில் முறையற்ற முகாமைத்துவம் நிர்வாக சீர்கேடு தொடர்பில் தொடர்ந்தும் பிரச்சினைகள் நிலவி வந்த நிலையில், களத்துக்கு நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இருந்தார்.
இதன் போது தோட்ட முகாமைத்துவ அதிகாரிக்கு எதிராக மக்கள் முறைப்பாடு முன்வைத்திருந்ததோடு தோட்ட அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர் .
பெருந்தோட்ட மலையக மக்களுக்கு எதிராக இனவாத ரீதியில் வார்த்தை பிரயோகங்கள் தோட்ட முகாமைத்துவ அதிகாரிகளினால் பிரயோகிக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது நிலைமை தொடர்ந்தால் பாரியதொரு தொழிற்சங்க போராட்டத்தை சந்திக்க நேரிடும். பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களுக்கும் சுய கௌரவம், தன்மானம் இருக்கின்றது இந்நாட்டிற்காக பிரதிபலன் ஏதும் இன்றி உழைக்கும் நம் சமூகத்தை சீண்டிப் பார்த்தால் பாராளுமன்றம் வரை எதிரொலிக்கும் என்றார்.
15 minute ago
37 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
37 minute ago
43 minute ago
1 hours ago