2026 மே 09, சனிக்கிழமை

இம்புல்பே பிரதேச செயலக பிரிவின் 3000 மக்களுக்கு பவுசர் மூலம் குடி நீர்

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இம்புல்பே பிரதேச செயலர் பிரிவின் 13 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த 793 குடும்பங்களைச் சேர்ந்த 3,000 பேர், கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான குடிநீர், இம்புல்பே பிரதேச செயலகம், இம்புல்பே பிரதேச சபை ஆகியவற்றின் உதவியுடன், பவுசர்கள் மூலம் விநியோக்கப்பட்டு வருகின்றன. இப்பிரிவில் அமைந்துள்ள சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதனால், பல்கலைக்கழகத்துக்கும் குடிநீரை வழங்குவதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலகமும் பிரதேச சபையும் மேற்கொண்டுள்ளன.

இப்பிரதேசத்தில் அமைந்துள்ள இயற்கை வனப்புடன் நிறைந்த வனப்பகுதிகளில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் காடழிப்பு, தீவைப்பு காரணமாகவே, நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட தரப்பினரும் சூழலியலாளர்களும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .