Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Gavitha / 2021 மார்ச் 02 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பொது மக்கள், மார்ச், எப்ரல் மாதக் கடைசி பகுதி வரை, சுகாதார, சமூக இடைவெளி பேணும் நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறையுடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும் என்று, நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர், விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.
இந்த இரண்டு மாதக்காலப்பகுதியில், வெளிமாவட்டங்களில் இருந்து அதிகளவானோர் வந்து செல்ல சாத்தியமுள்ளது என்றும் எனவே, இப்பிரதேசத்திலுள்ள பொதுமக்கள், மிகந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மார்ச் மாதத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில், பல பாரம்பரிய சமய நிகழ்வுகள் நடைபெறும் என்றும் இதற்காக, இப்பிரதேசங்களில் இருந்து தொழில் நிமித்தம் சென்றவர்கள், தங்களது வீட்டுக்கு வருகை தருவர் என்பதால், மிகுந்த அவதானம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ள மாணவர்களை, திருவிழாக்கள், களியாட்டம் நடக்கும், பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களுக்கு அனுப்புவதில், பெற்றோர் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்றும் அவர் கோரினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago