2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இரத்தினக்கல் அகழ்ந்த இளைஞன் மண்சரிவுக்குள் சிக்கி பலி

Gavitha   / 2020 ஒக்டோபர் 18 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட காவத்தை, நீலகமு பிரதேசத்தில், இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவர், மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இவருடன் மண்ணுக்குள் புதையுண்ட மற்றொரு நபர், மீட்கப்பட்டு, காவத்தை ​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பற்ற குழியொன்றில் இவர்கள் இரத்தினக்கல் அகழும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெல்மதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X