உமாமகேஸ்வரி / 2020 மார்ச் 18 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரியில் கொரோனா தொற்றுக்குள்ளான முதல் நபர் கண்டறியப்பட்டதையடுத்து, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள, இரத்தினபுரி, பெல்மதுளை, நிவித்திகலை உள்ளிட்ட பல நகரங்களில், மாணிக்கக்கற்கள் வியாபாரம் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இரத்தினபுரி மாவட்ட மாணிக்கக்கற்கள் வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் புன்சிறி தென்னகோன் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர், இரத்தினபுரி மாவட்டத்தில், ஆயிரக்கணக்கானவர்கள் ஓர் இடத்தில் (பொது இடத்தில்) ஒன்றுக்கூடி மாணிக்கக்கற்கள் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் இதன்போது வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டவர்களும் வருகை தந்து மாணிக்கக்கற்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
பெருந்திரளானவர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுவதால், அவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளமையைக் கருத்திற் கொண்டே, மாணிக்கக்கற்கள் வியாபாரத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, மாணிக்ககற்கள் அகழ்வு நடவடிக்கைகள், வழமைப்போன்று இடம்பெறுவதாக மாணிக்கக்கற்கள் அகழ்வோர் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .