2026 மே 02, சனிக்கிழமை

இரத்தினபுரியில் 12 ஜோதிலிங்க தரிசனம்

உமாமகேஸ்வரி   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பிரம்ம குமாரிகள் இராஜ யோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 12 ஜோதிலிங்க தரிசனம் இரத்தினபுரி நகரில் முதல் முறையாக இடம் பெறவுள்ளது. 

இந்தத் தரிசனம், எதிர்வரும் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 4ஆம் திகதி (சிவராத்திரி நாள்) வரை, இரத்தினபுரி சிவனாலய கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது என, ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை இடம்பெறும் இந்தத் தரிசனத்தைப் பார்வையிட, மாணவர்களை அழைத்து வருமாறு, சகல பாடசாலைகளுக்கும், சப்ரகமுவ மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ். குறுப்பாராச்சி, எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.  

இது இவ்வாறிருக்க, சிவராத்திரி தினத்தன்று (04), இந்தத் தரிசனமானது, காலை 9.00 மணி முதல் மறுநாள் (05) காலை 6.00 மணிவரை இடம் பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .