சிவாணி ஸ்ரீ / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்தில் 6 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட கொரோனா ஒழிப்பு குழுவின் ஒருங்கிணைப்பக்குழு கூட்டம் இன்று (10) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில், இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, இரத்தினபுரி மாவட்டத்தில் 3,306 பேர் தனிமைபபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அதில் 2,190 பேரின் தனிமைபடுத்தல் பரிசோனை நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை ரஜவக்க பிரதேசத்தில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தை, விரைவில் தனிமைப்படுத்தல் மய்யமாக அமைக்கவுள்ளதாகவும் அதில் 138 பேரைத் தங்க வைப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்றும் இதன்போது, மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
மேற்படி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒழிப்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளாகளுக்கு மருந்துகள் கிடைக்காவிட்டால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் காரியாலயம் ஊடாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்துமாறும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago