2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இரத்தினபுரி மாணவர்களுக்கான இணையத்தளங்கள் அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2021 ஜனவரி 06 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மூலம் www.enanapiyasa.lk    மற்றும் www.semis.lk  ஆகிய இரண்டு புதிய இணையத்தளங்கள், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில், நேற்று முன்தினம் (5) அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டன. 

www.enanapiyasa.lk இணையத்தளத்தின் மூலம் 1 தொடக்கம் 13வரை கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்கைநெறிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

www.smis.lk  இணையத்தளத்தின் மூலம் சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியாகள், கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரின் விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண பிரதான செயலாளர் ரஞ்ஜனி ஜயகொடி உட்பட கல்வி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.   

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X