Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
இரத்தோட்டை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி அதிகாரி ஒருவரை,
மாத்தளை மாவட்டத்தின் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஒருங்கிணைப்பு
செயலாளர் ஒருவர் விடுத்துள்ள மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று (18) பகல்
இரத்தோட்டை- கைகாவல பிரதேச செயலக அலுவலகத்துக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை
ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிராமய குழு கூட்டங்கள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது,
ஆளுங்கட்சி அரசியல்வாதிகளால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், கடமைகளுக்கு இடையூறு
ஏற்படுவதாகவும், அரசியல்வாதிகள் ஆதரவாளர்கள், அதிகாரிகளுக்கு அழுத்தம் விடுப்பதை
நிறுத்த வேண்டும் என தெரிவித்தே, இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .