Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
பெருந்தோட்ட நிர்வாகிளை பாதுகாப்பதற்காக, இராணுவத்தினரை பெருந்தோட்ட பகுதிகளுக்கு அழைப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.
எனவே, தோட்ட நிர்வாகங்கள், பாதுகாப்புக்காக இராணுவ பாதுகாப்பைக் கோரி,
அரசாங்கத்துக்கு எழுதிய கடிதத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என
வலியுறுத்தியுள்ளார்.
அவர் இவ்விடயம் தொடர்பாக, பெருந்தோட்ட கம்பனி நிவாகிகளின் நிரைவேற்றும் அதிகாரியும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளருமான ரொசான் ராஜதுரைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, பெருந்தோட்டங்களை ஆங்கிலேயர்கள் நிர்வகித்த பொழுது தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை பாதுகாத்தனர். தொழிலாளர்கள் தோட்டங்களையும் தோட்ட நிர்வாகிகளையும் பாதுகாத்தனர். அந்த காலப்பகுதியில் தொழிலாளர்களும் நிர்வாகிகளும் ஒரு புரிந்துணர்வோடு செயல்பட்டனர்.
ஆனால் இப்பொழுது தொழிலாளர்களுக்கு வேலை பழுவை அதிகரிக்கபட்டதாலும் அதிகரிக்கப்பட்ட சம்பளமும் தொழிலாளர்களுக்கு முறையாக கிடைக்காததால் தொழிலாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடுகளும்
வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.
தற்பொழுது அரசாங்கத்தால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்ட
பின்னர் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை மனிதர்களாக நினைப்பதில்லை. ஏற்கனவே கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கிய சலுகைகள் இப்பொழுது
வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கின்றார்கள்.
கொத்தடிமைகளாக இருக்கும் தொழிலாளர்களை மேலும் பயமுறுத்தி அடிமைகளாக்க தோட்ட நிர்வாகிகளின் பாதுகாப்பிற்காக இராணுவத்தை கொண்டு வருவதற்கு தோட்ட நிர்வாகள் முயற்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .