என்.மலர்வேந்தன் / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கரப்பாந்தட்ட வரலாற்றில் முதன்முறையாக இராணுவ பெண்கள் கரப்பந்து அணிக்காக விளையாடுவதற்காக ஸ்பிரிங்வெலி, மேமலை தோட்டத்தில் வசிக்கும் மூர்த்தி தமிழ்ச்செல்வி இன்று இணைந்துள்ளார் .
பதுளை மேமலை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் தனது 12வது வயதில் பாடசாலை பெண்கள் கரப்பந்து போட்டியில் விளையாட ஆரம்பித்தார்.
தமிழ்ச்செல்வி தனது 14வது வயதில் பதுளை மாவட்ட அணியில் இடம் பிடித்து இன்றுவரை 50 இற்கு மேற்பட்ட தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பதுளை மாவட்ட அணியில் தலைவியாகவும் இவ்வருடம் மாகாண அணியில் தலைவியாகவும் செயலாற்றி வருகின்றார்.
2017ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பெண்கள் அணி தலைவியாகவும் விளையாடிய தமிழ்ச்செல்வி தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தேசிய கரப்பந்தாட்ட குழாமில் பயிற்சியை பூர்த்தி செய்து இன்று இராணுவ பெண்கள் கரப்பந்து அணியில் இணைகிறார். இவரை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பதுளை வாழ் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago