Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 நவம்பர் 06 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
டயகம கிழக்கு 03ஆம் பிரிவு தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான தோட்டத் தொழிலாளியான இராமகிருஸ்ணனுக்கு, தோட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழில் அமைச்சு,மற்றும் தொழில் ஆணையாளர் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது.
45 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான குறித்த தொழிலாளி,தொழிற்சாலை உத்தியோகத்தரின் பணிப்பின் பேரில்,அவருடைய விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் (05) நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் தொழில் திணைகளத்தின் ஆணையாளர், மற்றும் அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கத்தின் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது மின்சாரம் தாக்கி பலியான தோட்ட தொழிலாளிக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக இ.தொ.கா பல்வேறு விடயங்களை முன்வைத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago