2025 மே 19, திங்கட்கிழமை

இருபதாயிரம் ரூபாய்க்கு இரட்டைக் கொலை செய்தவர் கைது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 13 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

பதுளை க்ளென்எல்பின் தேயிலை தோட்டத்தில் கடந்த 12 ஆம் திகதி மாலை தாய் மற்றும் மகளைக்  கொன்று, மூத்த மகளை படுகாயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பதுளை- வீரியபுர வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

 க்ளென்எல்பின் தோட்டத்தைச் சேர்ந்த 83 வயது தாய், 58 வயது மகள் ஆகியோர் கொல்லப்பட்டதுடன், 62 வயது மூத்த மகள் கடும் காயங்களுடன்  பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சந்தேகநபர், மூவரையும் கட்டிலில் தள்ளிவிட்டு, தலையில் உலக்கையால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும், கொலை செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கொழும்பில் மற்றுமொருவரின் ஓட்டோவில் சாரதியாக பணிபுரிந்து வந்த நிலையில், எரிபொருள் பிரச்சினை காரணமாக வேலையிழந்து பதுளை வீரியபுரவில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு வந்து வேலையில்லாமல் இருந்த வேளையில், இந்த குற்றத்தை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X