Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜூலை 04 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
தேசிய கடன் மறுசீரமைப்பின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் இறுதி சேமிப்பு மீது பலவந்தமாக கை வைக்கப்படுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர், " பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய கடன் மறுசீரமைப்பினால் தனியார் துறையில் தொழில் புரிகின்ற ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பனவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பரவலாக கருத்துக்கள் கூறப்படுகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் தமது அன்றாட உழைப்பின் ஊடாக இறுதிக் காலத்துக்கு சேமித்து வைத்திருக்கின்ற தோட்டத்து தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று தொழிலாளர்கள் தற்போது அச்சம் கொண்டுள்ளனர்.
எனவே தோட்டத் தொழிலாளர்களின் இறுதி சேமிப்பாக கருதப்படுகின்ற ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய தொகைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் பதில் கூற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025