2025 மே 17, சனிக்கிழமை

இளம் தாயின் விபரீத முடிவு

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 13 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

 

வலப்பனை – எலமுள்ள- மாரதுவெல எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது தாயொருவர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சு ஊட்டி தானும் நஞ்சுண்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

தனது கணவர் தன்னையும்,பிள்ளைகளையும் உரிய முறையில், கவனிப்பதில்லை என்றும் உண்பதற்கு உணவு கூட இல்லாத நிலையில்,  பட்டி​னியுடன் நாட்களை கடத்தி இறுதியில்  உயிரை மாய்த்துக்கொள்ள தயாராகியதாக விசாரணையின் போது, அத் தாய் தெரிவித்துள்ளார்.

மேலும் 06,05 மற்றும் 01 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகள் மற்றம் ஒரு ஆண் பிள்ளை ஆகியோரை பொலிஸார்  மீட்டு தமது பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

 இச்சம்பவம் தொடர்பில் மதுரட்ட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .