Kogilavani / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு விவகாரத்தில், மலையகத்தைச் சேர்ந்த இரு பிரபல கட்சிகளின் இளைஞர் அணி தலைவர்களுக்கிடையில் கருத்து மோதல் ஒன்று நிலவி வருகிறது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவரும் கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளருமான ராஜமணி பிரசாத, தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா.சிவனேசன் ஆகியோருக்கு இடையிலேயே கருத்துமோதல் நிலவிவருகிறது.
மேற்படி இருவரும் ஆரம்பகாலத்தில், இ.தொ.காவின் இளைஞரணி பிரிவுக்குப் பொறுப்பாளர்களாக பதவி வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலத்தை நிருபிக்கும் நோக்கில், இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், கடந்த வெள்ளிக்கிழமை(5) பெருந்தோட்டம் தழுவியப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் போராட்டம் தொடர்பில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவர் பா.சிவநேசன், எதிரான கருத்துகளை முன்வைத்து வந்த நிலையில் அதற்கு பதலளிக்கும் வகையில், இ.தொ.காவின் இளைஞரணியின் தலைவர் ராஜமணி பிரசாத் தனது கருத்துகளை முன்வைத்து வருகின்றார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து மோதல்கள் வலுப்பெற்றுள்ளது. இந்தக் கருத்து மோதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பொது அமைப்புகள் அறிக்கைகளை விட்டு ஒருவரை ஒருவர் சாடிக்கொள்ளாது மக்கள் நலன்சார்ந்த ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் வலியுறுத்தியுள்ளன.
அத்துடன், இளைஞர் அணிகளின் தலைவர்களின் கருத்து மோதல்கள், தொழிலாளர்களின் உரிமைக்குப் பாதகமாக அமைந்துவிடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுப்பதாக, பொது அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.
20 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
30 minute ago