Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2024 ஜனவரி 20 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய உறுப்பினரும், ஊவா மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஆறுமுகம் கணேசமூர்த்தி திடீர் உடல்நலக் குறைவால் இன்று காலை வெளிமடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது காலமானார்.
ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம், மற்றும் பசறை தமிழ் தேசிய பாடசாலை என்பவற்றின் பழைய மாணவரான இவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக லுனுகலை பிரதேச சபையின் உறுப்பினராகவும், முன்னாள் ஊவா மாகாண சபையின் உறுப்பினராகவும் இருந்து இவர் மக்களுக்காக பல சேவைகள் செய்துள்ளர்
ஊவா மாகாண சபையின் உறுப்பினராக இருந்த காலத்தில் பதுளை மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு மாகாண தமிழ் கல்வி அமைச்சின் கருத்திட்ட ஆலோசகராக இருந்த காலத்தில் விஞ்ஞான துறையை மேம்படுத்த காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.
இவரது பூதவுடல் இன்று அவரின் மனைவியின் ஊரான ஹாலிஎல ஊவா கட்டவலயில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படு நாளை 21 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு அவரது பிறந்த ஊரான லுணுகலை ஹொப்டன், அம்பலாங்கொடைக்கு எடுத்து செல்லப்பட்டு அவரின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுடதன்
பின்னர் 22ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு அம்பலாங்கொடை தோட்டப் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
25 minute ago
28 minute ago