2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இ.தொ.கா உறுப்பினர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்

Editorial   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதீஸ், எஸ்.கணேசன்

 

ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்ட சடையன் பாலேந்திரன், தனது கடமைகளை, இன்று (05) காலை 8 மணியளவில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் சடையன் பாலேந்திரன், தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டத.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான இப்பேரணி, ஹட்டன் டிக்கோயா நகரசபை வரை சென்றது.

இதேவேளை, ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்வதற்கு, முதற்கட்டமாக, உலக வங்கியின் ஊடாக 500 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கெடுப்பதற்கான தீர்மானம் ஒன்று எட்டப்பட்டுள்ளதென, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இதேவேளை, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத், பிரதித் தவிசாளர் முத்துராமலிங்கம் ஜெயகாந்த் ஆகியோர், தங்களது கடமைகளை, இன்று (05) காலை 8.30 மணியளவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் முன்னிலையில் பொறுப்பேற்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X