Editorial / 2025 ஓகஸ்ட் 03 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவுக்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் வரவேற்றனர். அத்துடன், இருதரபினருக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில், இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன் போது இ.தொ.காவின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதி தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
மலையகத்தில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் குறித்தும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் குறித்து இ.தொ.காவால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
18 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago