Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்களின் சேவை தொடர்பாகவும் பஸ்களில் தமிழ் மொழியில் பலகைகள் வைக்கப்படாமை தொடர்பாகவும் நேற்று (17), கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், டிப்போ அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஹட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், சமூக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமகன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றதையடுத்தே, இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில், தமிழ்ப் பெயர்ப் பலகை இன்மை, பஸ் நிலையத்துக்கு உரிய நேரத்துக்கு வராமை, ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், சில பிரதேசங்களுக்கான பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதையடுத்து, தற்போது சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட பஸ் சேவைகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த, அமைச்சர் பணிப்புரை விடுத்த அதேவேளை, உரிய நேரத்தில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவும் ஆலோசனை வழங்கினார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago