Janu / 2026 பெப்ரவரி 08 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை - டயகம வீதியில் லிந்துலை, திஸ்பனை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றை நிறுத்தி பேருந்து சாரதியை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் ஞாயிற்றுக்கிழமை (08) அன்று கைது செய்யப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை - எல்ஜின் நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தொன்றின் இரு ஊழியர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாரதியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியபோது பாடசாலை மாணவர்கள் உட்பட ஏராளமான பயணிகள் பேருந்தில் இருந்ததாகவும் பேருந்தில் இருந்த ஒருவர் இதனை தனது கையடக்கத் தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

40 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago