Editorial / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடுநுவர, யட்டிநுவர ஆகிய இரண்டு தேர்தல் தொகுதிகளை ஒன்றிணைந்து நடத்தப்படும் நடமாடும் சேவையொன்று, எதிர்வரும் 2ஆம் திகதி, தவுலகல வஹங்கே அல் அறபா மகா வித்தியாலத்தில், காலை 9.30 மணி முதல் 3.00 மணி வரை இடம்பெறவுள்ளது என, முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர். எம். மலீக் தெரிவித்தார்.
முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமின் ஆலோசனையின் கீழ், முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து, இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு தொகுதிகளிலுள்ள குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகள், தைக்காப் பள்ளிவாசல்கள், ஜும்ஆப் பள்ளிவாசல்கள் போன்ற பதிவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதல், புதிய பதிவுகள் மேற்கொள்ளல், பதிவு செய்யப்படால் உள்ளவற்றை மீள் பரிசீலனை செய்தல் போன்ற முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களுடன் தொடர்புடைய சகல பிரச்சினைக்கும், இந்த நடமாடும் சேவையின் மூலம் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.
எனவே, பிரதேசத்திலுள்ள மக்கள் அனைவரும், இந்த நடமாடும் சேவையில் கலந்துகொள்ளுமாறு, ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago