2026 மே 09, சனிக்கிழமை

’உதவி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசியல் இலாபம் தேட முயற்சி’

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

உதவி ஆசிரியர்களை வைத்துகொண்டு, சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,

உதவி ஆசிரியர்களாக இருந்தவர்களுக்கு, நிரந்தர நியமனம் வழங்குவதாக, மாவட் குழுக்கூட்டத்தின் போது, மத்திய மாகாண ஆளுநனர் தெரிவித்திருந்தார் என்றும் இதற்கிணங்க, கடந்த வாரம் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன என்றும் அவர் கூறினார்.

தற்போது, மத்திய மாகாணத்தில் 805 உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிகைள நிறைவு செய்துள்ளனர் என்றும் அதில், 215 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குவதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்திருந்தார் என்றும் ஆனால், அதில் 51 பேர் மாத்திரமே தமிழர்கள் என்றும் அவர் கூறினார்.

எனவே, இந்த நியமனத்தில், தமிழ் ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் மலையகத்தில் ஏகபிரதிநிதிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு இருக்கும் அமைச்சர்கள், இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .