2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Editorial   / 2020 மே 04 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

நோர்வூட் பிரதேச சபைத் தவிசாளர் ரவி குழந்தைவேல், பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட்319ஜீ கிராம சேவகர், சமூர்ததி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருக்கு எதிராக, தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச அமைப்பாளர் சுப்பைய்யா கமலனாதன் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

தன்னைத் தாக்க முற்பட்டார்கள் என்று கூறியே, இந்த முறைப்பாடு நேற்று (03) மாலை பதிவு செய்யப்பட்டுள்ளது என, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

வாழ்வாதார கொடுப்பனவுக்கான விண்ணப்பப்படிவத்தை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள், சனிக்கிழமை (2) முன்னெடுக்கப்பட்டதகாவும் இதன்போது, பிரதேசத்தின் அமைப்பாளர் என்ற ரீதியில் அந்த நடவடிக்கைகளுக்காக, கிராம உத்தியோகத்தர் தன்னை அழைத்திருந்ததகாவும் எனினும், அங்கு தான் சென்றபோது, நோர்வூட் பிரதேச சபையின் தலைவரும் கிராம உத்தியோகத்தரும் சமூர்த்தி உத்தியோகத்தரும் தன்னை வெளியில் செல்லுமாறு கூறி தாக்க முற்பட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .