2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

Sudharshini   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

மது ஒழிப்பு வாரத்தையொட்டி இலங்கையிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் சனிக்கிழமை (03) மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருந்த நிலையில், உத்தரவை மீறி வட்டவளை, டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் இரகசியமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவரை சனிக்கிழமை (03) இரவு வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 65 மதுபான போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபரை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்தபின்னர், பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்த  மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .