2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உயரதிகாரியை மாற்றாவிடின் ‘போராட்டம் வடிவம் மாறும்’

Gavitha   / 2017 ஏப்ரல் 02 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

நுவரெலியா – கந்தப்பளை - பார்க் தோட்டத்தின் மூன்று பிரிவுகளுக்கும் பொறுப்பான தோட்ட அதிகாரியை அத்தோட்டத்திலிருந்து வெளியேற்றும் விவகாரம் தொடர்பில்,  கொழும்பில் இடம் பெற்ற பேச்சு வார்த்தையின் முடிவை உடப்புசலாவை பெருந்தோட்ட கம்பனி, நடைமுறைப்படுத்தவில்லை என, இப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், உடப்புசலாவை பெருந்தோட்ட கம்பனி, தொழில் திணைக்கள ஆணையாளரின் கூற்றை மீறி செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து தோட்டத் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கந்தப்பளை பார்க் தோட்ட உயரதிகாரியின் செயற்பாடுகளைக் கண்டித்து, தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு மாதகால பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

இதையடுத்து, 28 .12.2016ஆம் அன்று   கொழும்பில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் ​பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட போது, தோட்ட அதிகாரி, தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கையில் மூன்று மாதங்களுக்கு தலையிட மாட்டார் எனவும் மூன்று மாதங்கள் பின்னர், தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்வதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து, தொழிலாளர்கள் கடந்த ஜனவரி மாதம் 02ஆம் திகதி தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

ஆனால், கடந்த 31ஆம் திகதி மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், தோட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்படவில்லை  என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இன்னும் ஒரிரு தினங்களில் இவ்வதிகாரியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், தொழிற்சங்கங்களுக்கு அறிவித்து விட்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .