2026 மே 09, சனிக்கிழமை

உயர்தரத்துக்குச் செல்ல முடியாதவர்களுக்கு உதவி

செ.தி.பெருமாள்   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில், க.பொ.த சா/த பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, வறுமை காரணமாக உயர்தரத்துக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கான உதவித்திட்டம், அமரர் நடராஜா அறக்கட்டளையூடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்துலக மருத்துவ நல அமைப்பு, அமரர் நடராஜா அறக்கட்டளையூடாக மலையகத்தின் சுமார் 142 உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டம், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் மலையகத்தின் பொறுப்பதிகாரி தலைமையில், மஸ்கெலியாவிலுள்ள அம்பாள் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, ஹட்டன் வலய கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் கலந்துக்கொண்டிருந்ததுடன், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் ஜி.செண்பகவள்ளி, மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .