Freelancer / 2023 ஜூலை 11 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து சடலமாக மீட்கப்பட்ட பெருமாள் பெரமாய் 67 வயதுடைய வயோதிப பெண், திம்புல-பத்தனை தோட்டத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மன நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(09) வீட்டைவிட்டு சென்றுள்ள நிலையில் நேற்று(10) தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் நீதவானின் உத்தரவுக்கு அமைய சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சம்பவம் அறிந்த குறித்த பெண்ணின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
16 minute ago
29 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
29 minute ago
9 hours ago