R.Maheshwary / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டக்கொடை மேற்பிவு ரயில்வே கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் அதனை உடன் சீரமைத்து தருமாறு, வட்டக்கொடை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வட்டக்கொடை ரயில்வே நிலையத்துக்கருகில் காணப்படும் குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு வேலி காணப்பட்டாலும், சுமார் 7 வருடங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.இதனால் ரயில் வரும் வேளை குறித்த வேலியை மூடமுடியாத நிலை ஏற்படுவதால் மூங்கிலை வைத்து மூடவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் ஊர் மக்கள் தெரிவிக்கையில், இவ் ரயில்வே கடவைக்கு பாதுகாப்பு வேலியை போடுமாறு பல முறை வலியுறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம் .ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்கடவையையே பிரதான பாதையாக வட்டக்கொடை மேற்பிரிவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பாடசாலை மாணவர்கள் தொடக்கம் தோட்டத்தொழிலுக்கு வேலைக்கு செல்வோர் முதல் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் எவரும் இக்கடவைக்கு உரிய பாதுகாப்பு வழங்க முன்வரவில்லையென மக்கள் அங்கலாய்கின்றனர்.
மேலும் ரயில் வரும் நேரத்தை அனுமானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் கடந்த காலங்களில் பல விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
இந்நிலை கடந்த 7 வருடமாக தொடர்வதால் விரைவில் இதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு வட்டக்கொடை மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago