Editorial / 2022 டிசெம்பர் 18 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி சந்ரு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா மாஹாஎலிய காட்டுப்பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (18) குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால் துர்நாற்றம் வீசுவதை அவதானித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த காட்டுப் பகுதிக்குச்சென்ற நானுஓயா பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்ட கடந்த ஒரு மாதமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சுமார் 51 வயதுமதிக்கத்தக்க ஆண் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட ஆதார பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
36 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
1 hours ago